ஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ்.
இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரியதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.
அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்.
இது பற்றி பிரான்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும் போதே பிரான்சு இப்படி தான் பிறந்தான்.
அவன் பிறந்த பின்னர் நாங்கள் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லாரும் போல சாதாரணமாக ஆகவில்லை.
அவனை சிறு வயதிலிருந்தே நான் உட்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாக தான் பார்க்கிறோம்.
அவனும் எல்லாரும் போல தினமும் பள்ளிகூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான் மற்றும் என் மகன் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போல தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிரான்சு கோவில் வாசலில் உட்காருவான். அவனிடம் பொது மக்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சிறுவன் பிரான்சு கூறுகையில், என் பெயர் கூட இங்கு நிறைய பேருக்கு தெரியாது.
எல்லோரும் என்னை கணேசா என தான் அழைப்பார்கள். என் பள்ளி ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் என்னை வணங்குவார்கள், அவர்களை ஆசிர்வதிப்பேன் என கூறியுள்ளான்.
சிறுவன் பிரான்சுக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்பதும், அவர்களின் ஒரு சகோதரருக்கு இதே போன்ற விசித்திர உடல் பிரச்சனை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.