நம் உடல் எடையை குறைக்கவும், உடலில் தேவையில்லாமல் உருவாகும் நோய்களை தடுக்கவும் நடைப்பயிற்சியை விட அருமையான விடயம் இருக்க முடியாது.
ஆனால் அதை சரியாக செய்தால் மட்டுமே அதன் பலனை முழுவதுமாக நாம் அனுபவிக்க முடியும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு மணிநேரத்திற்கு 4 மைல்கள் என கணக்கு வைத்து நடந்தால் நம் உடலில் இருந்து 400 கலோரியை குறைக்கலாம்.
அதேபோல Pedometerஎன்னும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதை நம் வயிற்று பகுதியில் கட்டி கொண்டால் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை அந்த கருவி துல்லியமாக காட்டும்.
அதே போல எத்தனை படிகள் நாம் நடக்கிறோம் என்பது மிக முக்கியமாகும். ஒரு மைலுக்கு 2000 அடிகள் வைத்து நடந்தால் 100 கலோரிகளை நாம் குறைக்க முடியும்.
ஒரு பவுண்ட் 3500 கலோரி என வைத்து கொண்டால் ஒரு வாரத்தில் அந்த ஒரு பவுண்ட் அளவுக்கு நடந்தால் 500 கலோரியை நாம் நம் உடலில் இருந்து நீக்க முடியும்.
நாம் நடைபயிற்சி செய்யும் முறையும் நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது, நடக்கும் போது நம் பார்வை நேராக இருத்தல் அவசியம் மற்றும் வயிற்று பகுதியை இறுக்க வைத்து கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி செய்கையில், நம் தாடை பகுதியானது நிமிர்ந்த மேனியில் இருப்பது முக்கியமாகும்.
ஒருவர் புதிதாக நடைபயிற்சி செய்ய தொடங்கும் போது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் அதை செய்யலாம்.
பின்னர் அது பழகியவுடன் 30-60 நிமிடங்கள் என அதை அதிகபடுத்தி கொள்வது சரியானதாக இருக்கும்.