உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்தால் பல காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் அல்லல்படுகின்றனர்.
இதனையடுத்து மனித ஆர்வலர்கள் பலரும் செடிகள் நட்டு அதை காடுகளாக மாற்றி இயற்கையை இன்னும் வாழ வைத்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் இந்தியாவை சேர்ந்த Shubhendu Sharma என்னும் மனிதர்.
டோயோடா கார் நிறுவனத்தில் பொறியாளராக மிக அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்த இவர் மரம் வளர்ப்பு, காடுகள் உருவாக்குதல் போன்றவற்றுக்காக தன் வேலையையே உதறி தள்ளியுள்ளார்.
இதுவரை ஈராக், பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளில் உள்ள 28 நகரங்களில் 85க்கும் மேற்ப்பட்ட காடுகளை Shubhendu உருவாக்கியுள்ளார்!.
இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை மீது பிரியம் அதிகம். நான் வேலை செய்த நிறுவனத்தின் சுற்றுப்புறங்களில் மரங்கள் நடுவதற்கு Akira Miyawaki என்னும் தாவரவியல் பட்ட படிப்பாளர் தன் குழுவுடன் வந்தார்.
நானும் இது போல மரங்கள் நட்டு உலகை என்னால் முடிந்த வரை செழிப்பாக மாற்ற வேண்டும் என அவரிடன் கூறினேன், அதற்கு அவர் உதவினார்.
Miyawaki தொழில்நுட்பம் என்னும் முறையை அவர் சொல்லி தந்தார். அதாவது வித விதமான செடிகளை அந்த மண்ணின் தரம் அறிந்து ஒரு சிறிய இடத்தில் அருகருகே நடுவது தான் அந்த நுட்பமாகும்.
அதன் படி செடிகள் நடும் பணியை முதன் முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரம்பித்தேன்.
பின்னர் பல மாநிலங்கள், நாடுகள் என என் மரம் நடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தரிசு நிலங்கள் அனைத்தும் பசுமையாக மாறும் வரை என் பணி தொடரும் என்கிறார் Shubhendu நம்பிக்கையுடன்!.