உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார நிறுவனமாக விளங்கும் அமேஷான் தளமானது பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது வீடுகளுக்கு சென்று அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்கும் சேவை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.
இச்சேவையினை அமேஷான் தளத்தில் ப்ரைம் மெம்பர் கணக்கு வைத்திருப்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுவாக வீட்டிலுள்ள தம்பதியர்கள் பணிக்கு செல்லும் சமயங்களில் தமது வீட்டினை பராமரிக்க மிகவும் சிரமப்படுவார்கள்.
இப்படியானவர்களை இலக்கு வைத்து இச் சேவையினை அமேஷான் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இச் சேவையின் பயனாக வீட்டு உரிமையாளர்கள் தமது வேலைச் சுமையினை குறைத்துக்கொள்ள முடியும்.
மேலும் இச்சேவையினைப் பெற விரும்புவர்கள் விண்ணப்ப படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக விண்ணப்பப்படிவம் விரைவில் ஒன்லைனில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.