இந்திய நாட்டில் புழங்கி வரும் கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
அதே நேரத்தில், மக்கள் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும், அதற்கான முழு மதிப்பு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் இயங்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், நகைகடைகளில் நகை வாங்குவதற்கு பான் கார்டு மிகவும் அவசியம் என அடுத்த அதிரடி நடவடிக்கையாக அரசு காயை நகர்த்தியுள்ளது.
மேலும், பான் கார்டு இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யக்கூடாது என மத்திய வருவாய் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.