வழமையான பயங்கரவாதத்தில் இருந்து இலங்கை விடுதலைப்பெற்றுள்ளது. எனினும் இலங்கையர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களில் இணைவதை அறிந்துள்ளதாக இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா பாலியில் இடம்பெற்ற ‘இன்டர்போல்’ பொதுச்சபை அமர்வில் பங்கேற்றபோதே ஜெயசுந்தர இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டமையை அடுத்தே இலங்கையர்கள், வெளிநாடுகளின் பயங்கரவாத அமைப்பில் இணைந்துக்கொள்ளும் தகவல்கள் தெரியவந்தன.
இலங்கையை பொறுத்தவரை, பல ஆண்டுக்களாக அது பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும் 2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் அடியோடு வேறெடுக்கப்பட்டது. தற்போது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நல்லிணக்க மீள்கட்டமைப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இலகுவானவை என்பதை இலங்கையின் படையினர் அறிந்துள்ளனர்.
எனினும் பல்வேறு நாடுகளின் பல்வேறு நீதிமுறைகளின் கீழ் செயற்படும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க முன்வரவேண்டும் என்றும் ஜெயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.