திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து விட்டு, தான் காதலித்தவனை 2-வது திருமணம் செய்து கொண்டு வந்த புதுப்பெண்ணால் குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலி தொழிலாளி. இவருடைய மகள் துர்கா (வயது 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் துர்கா(21), இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த 2-ந் தேதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. மணமகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்று வருந்திய துர்கா கடந்த 6ந் தேதி மாலை முன் கணவன் வீட்டைவிட்டு ஓடினார். அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகள் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இருப்பினும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ந் தேதி காலையின் தனது காதனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் வந்துள்ளனர். போலீசார் அவர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது துர்கா போலீசாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறினார். இதனையடுத்து அவர்களை போலீசார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.