தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ‘நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இதை சமீபத்திய பேட்டியில் த்ரிஷாவே உறுதிசெய்துள்ளார். மேலும் ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.