விஜய் தனது மகன் சஞ்சய்யை ‘வேலாயுதம்’ படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தை ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதேகூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.