நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குமார புதுக்குடியிருப்பில் காதல் பிரச்னையால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சுசீலா, குமார் என்ற இருவர் காயமடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வள்ளியூர் காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.