நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று 2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வாசிப்பின் போது, இலங்கையை, ஆசியாவின் கேந்திர மத்தியநிலையமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக இலங்கையை பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய செய்து நாட்டின்பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இலங்கையை சர்வதேச பொருளாதார மற்றும் கேந்திரமையமாக மாற்றுவதே இலங்கை அரசின் திட்டம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கதெரிவித்துள்ளார்.