நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10
மிளகு – 4
தயிர் – இரண்டு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை
நெல்லிக்காயை கழுவி கொட்டை நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். மிளகை நன்கு பொடிக்கவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்தபின், நறுக்கிய நெல்லிக்காய், மிளகுத்தூள் போட்டு வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி பின் இறக்கி வைத்து ஆறீயதும் தயிர் சேர்த்து பரிமாறவும்.
இதை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பலன்கள் –
பித்தத்துக்கு நல்லது.
ரத்த விருத்தி உண்டாகும்.