நாடாளுமன்றில் பலரை சாப்பாட்டால் கதி கலங்க வைத்த ஜனாதிபதி மைத்திரி! இப்படியும் உலகில் மனிதர்களா

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.