ஒருவர் பிறப்பில் இருந்து இறப்பது வரை என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது, பலன்கள் என்ன? தீமைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? பரிகாரம் என்ன என்று பலவற்றை அலசி ஆராய்ந்து சாஸ்த்திரங்கள் இந்து மதத்தில் இயற்றப்பட்டுள்ளன.
சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என பல வடிவில் ஒரு மனிதன் அறிந்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும், வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், பிரபஞ்சத்தை பற்றியும் இந்து மதம் ஆராய்ந்துள்ளது.
பண்டைய காலத்தில் பல முனிவர்கள், சான்றோர்கள் சுவடிகளில், கல்வெட்டுகளில் இதை பதிவு செய்து சென்றுள்னர். அதில், மனைவியின் கால்களை வைத்து கணவனின் தலைவிதி கூறும் சாமுத்திரிகா சாஸ்திரம் பற்றி இனிக் காணலாம்…
ஐந்து நபர்கள்!
ஐந்து நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள, கால்களின் ஐந்து விரல்கள்…
* கட்டை விரல் – அங்குஷ்தா
* இரண்டாம் விரல் – தர்ஜானி
* நடுவிரல் – மத்யமா
* நான்காம் விரல் – அனாமிகா
* சுண்டுவிரல் – கணிஷ்திகா
அர்த்தநாரீஸ்வரர்!
பண்டைய சான்றோர்கள், அர்த்தநாரீஸ்வரர் கொண்டு, பெண் இல்லாமல், ஆண் முழுமை அடைவதில்லை என கூறியுள்ளனர். ஆண் பெண் உடலில் இருக்கும் மச்சம், பாதம், கைரேகை போன்றவற்றை வைத்து மற்றவற்றை பற்றி அறிய முடியும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உள்ளங்கால்!
ஒரு பெண், சக்ரா, த்வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறிய முடியுமாம்.
விரல்கள்!
பெண்ணின் இரண்டாம் விரல் மற்ற விரல்களை விட பெரிதாக இருந்தால், கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.
மலை!
பெண்ணின் கால் விரல் அமைப்பு மலை போல இருந்தால், மங்களகரமான குணம் படைத்திருப்பார், கணவனின் வெற்றிக்கும், உயர்விற்கும் பக்கபலமாக இருப்பார்.
பூமியுடன் தொடர்பு!
பெண் நடக்கும் போது, நான்காம் விரல் – அனாமிகா ; சுண்டுவிரல் – கணிஷ்திகா விரல்கள் பூமியை முழுமையாக தொடாமல் இருந்தால், அவர்கள் நம்பக தன்மை இல்லாமல் இருப்பார்கள்.
மத்யமா விரல்!
நாடு விரலான மத்யமா விரல் கட்டை விரல் விட நீளமாக இருந்தால், அந்த பெண் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு, உபத்திரவம் செய்து கொண்டு, கவலை அடைய வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
அனாமிகா – கணிஷ்திகா!
மத்யமா – அனாமிகா விரல்கள் ஒரே அளவில் இருந்தால், அவரது கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும். கணவருடன் விதண்டாவாதம் செய்துக் கொண்டே இருப்பார்.
பாதம்!
பெண்ணின் பாதம் வட்டமாக இருந்தால், அவரது கணவரின் வாழ்க்கை வெற்றிகரமாக, இன்ப மயமாக அமையும். இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
கட்டை விரல், இரண்டாம் விரல் மத்தியில் இடைவெளி இருந்தால், வாழ்க்கையில் சில போராட்டங்கள் இருக்கும்.நாடு விரல் கட்டை விரலைவிட பெரியதாக இருந்தால் அவர்களது காதல் கதை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது.