வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் சிந்திக்கமுடியாது. அப்படி சிந்திப்பவை அனைத்து நடந்துவிட்டால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது.
அப்படி எதிர்பாராத விபத்தில் தோன்றிய காதலால் இந்த உலகுக்கு சூப்பர் ஸ்டார் ஒருவர் கிடைத்த சுவாரசிய கதை இதோ,
Taj Mohammad என்பவர் தனது தங்கையுடன் சேர்ந்து காலைப்பொழுதில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது அவர்கள் கண்ணெதிரேலேயே கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
அந்த காருக்குள் 3 பெண்களும் ஒரு தந்தையும் இருந்துள்ளனர். அந்த பெண்களில் ஒருவர்தான் லதிப் பாத்திமா. விபத்தில் இவருக்கு தான் காயம் அதிகம்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்ந்த தாஜ் மொகமத்து, லதிப் பாத்திமாவுக்கு ரத்தம் கொடுத்து அவரை உயிரை காப்பாற்ற உதவியுள்ளார்.
அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார் தாஜ். இந்த சந்திப்பின்போது தாஜ், பாத்திமா மீது காதல்வயப்பட்டுள்ளார்.
தாஜ்ஜின் நடவடிக்கைகள் பாத்திமாவின் தந்தைக்கு பிடித்துவிடவே, தனது இளைய மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு தாஜ், நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர், இந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு பிறந்தவர்தான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
மொத்தத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தால், திறமையான ஒரு சூப்பர் ஸ்டார் இந்த உலகுக்கு கிடைத்துள்ளார்.