பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியின் போது சிறுவன் ஒருவன் இளவரசர் ஹரியை அசர வைத்த சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.
பிரித்தானியாவில் மறைந்த ராணுவ வீரர்களுக்கான நினைவு நாள் விழாவில் இளவரசர் பிலிப்புடன் இளவரசர் ஹரி கலந்து கொண்டார்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் ஆண்டு தோறும் இதே மாதம் நடைபெறும் இந்த விழாவானது ராயல் பிரிட்டிஷ் ராணுவப் பிரிவில் உயிர் நீத்த ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட இளவரசர் ஹரியை சிறுவன் ஒருவன் அசர வைத்துள்ளான்.
குறித்த சிறுவனின் உறவினர் லெப்டினன்ட் ஆரோன் லூயிஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆப்கானில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். அவரது மெடல்கள் மற்றும் சிறப்புகளை அணிந்து வந்த சிறுவன் அதை இளவரசர் ஹரி காணும் வகையில் முன்வரிசையில் நின்றுள்ளான்.
இந்த நிலையில் ஒவ்வொருவராக நலம் விசாரித்து வந்த ஹரியை குறித்த சிறுவனின் சேட்டை அந்த சிறுவன் பக்கம் ஈர்த்துள்ளது. இதனையடுத்து சில நிமிடங்கள் அந்த சிறுவனுடன் இளவரசர் ஹரி செலவிட்டுள்ளார்.
அமெரிக்க நடிகை மேகனுடன் உறவில் இருப்பதை இளவரசர் ஹரி உறுதி செய்த பின்னர் நடைபெறும் முதல் பொது நிகழ்ச்சியாகும் இது. கடைசியாக அவர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டிங்ஹாம் அரண்மனையில் சென்றிருந்தபோது என்பது குறிப்பிடத்தக்கது.