விநாயகரின் மறுஅவதாரம்..! சிறுவனிடம் ஆசிர்வாதம் வாங்க முண்டியடிக்கும் பொதுமக்கள்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ். இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரிதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.

அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து கூட நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்.

இது குறித்து பிரன்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும்போதே பிரன்சு இப்படித்தான் பிறந்தான். அவன் பிறந்த பின்னர் நாங்கள் அனைவரும் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லோரும் போல சாதாரணமாக ஆகவில்லை.

அவனை சிறுவயதில் இருந்தே நான் உள்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாகத்தான் பார்க்கிறோம். அவனும் எல்லோரும் போல தினமும் பள்ளி கூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான். அது மட்டும் அல்லாமல் எனது மகனின் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போலதான் உள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கோவில் வாசலில் உட்காருவான். அவனிடம் பொதுமக்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள்.

சிறுவன் பிரன்சு கூறும்போது, என் பெயர் கூட இங்கு நிறைய பேருக்கு தெரியாது. எல்லோரும் என்னை கணேசா என்று தான் அழைப்பார்கள். என் பள்ளி ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் என்னை வணங்குவார்கள். அவர்களை நான் ஆசிர்வதிப்பேன் என்றார்.

சிறுவன் பிரான்சுவின் உடன் பிறந்தவர்கள் 4 பேர். அவர்களில் ஒரு சகோதரருக்கு இதே போன்ற விசித்திர உடல் அமைப்பு பிரச்னை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.