இன்றைய ராசி பலன் 11-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.

  • கன்னி

    கன்னி: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது நட்புமலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உற்சாகமான நாள்.

  • மீனம்

    மீனம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.