சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை மூடி மறைப்பதற்கு எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க கோரியுள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட அதே தினத்தில் கொலை செய்யப்பட்ட தண்டுவம் முதலாளி கொலையின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது பற்றி வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தாஜுடீன், எக்னெலிகொட கொலையாளிகள் பற்றியும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்வோரும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
குற்றங்களை விசாரணை செய்ய முன்னதாக தாம் குற்றங்களைச் செய்யாதிருக்க வேண்டும்.
விமல் வீரவன்ச வீட்டில் இளைஞர் மரணமானது குறித்து பேசப்படவில்லை. ரங்கே பண்டாரவின் மகன் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு ஒருவர் கொல்லப்பட்டது குறித்து பேசப்படவில்லை.
லசந்த கொலையுடன் யாருக்கு தொடர்பு அதனை மறைக்க யார் யார் கொல்லப்பட்டனர். இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் கொல்லப்பட்டாரா தற்கொலை செய்துகொண்டாரா?
லசந்த கொலை, தாஜூடீன் கொலை மற்றும் எக்னெலிகொட கொலை பற்றி விசாரணை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.