கிரீன் டீயை குடிப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. உடல் எடை குறைக்கும். இளமையை நீட்டிக்கும் உடலுக்கு நல்லது நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்டு இருக்கிறது. கிரீன் டீ உடலுக்கு நல்லதுதான் சற்றும் மாற்றுக் கருத்தில்லை.
drink green tea reduce weight
ஆனால் அதனை குடித்த பின்னும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று கவலைப்படுவதுண்டு. எப்படி குடிக்க வேண்டும் என்ற ட்ரிக்கை தெரிந்து கொண்டால் உடல் எடையை குறைக்கலாம். அதன் வெப்ப நிலை, வாசனைப் பொருட்கள் என பலவிஷயங்கள் அதன் சத்துக்களை பாதிக்கின்றது என தெரியுமா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாமென படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது சாமந்தி, பெர்ரி டீ என பல வகை வாசனை பொருட்களை சேர்த்து கிரீன் டீ கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அந்த பொருட்கள் கிரீன் டீயிலுள்ள சத்துக்களை பாதிக்கும். சுத்தமான வேறு வாசனைகள் கலக்காத கிரீன் டீயே உடலுக்கு முழு சத்தையும் தரும்.
சிலருக்கு சூடாக குடிப்பதை விட கிரீன் டீயை தயார் செய்து சில்லென்று ஐஸ் கட்டி போட்டு குடிப்பார்கள். ஐஸ் கட்டி தேயிலையின் சத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும். வெதுவெதுப்பான நிலையில் கிரீட் டீயை குடிப்பதே உடலுக்கு நல்லதை தரும்.
தேயிலை தூள் எப்போது பாக்கெட் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். ஏனென்றால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் 6 மாதத்திற்கு பின் அதன் சக்தியை இழந்துவிடும். ஆகவே பாக்கெட் தயாரிக்கப்பட்ட சில மாதங்களில் உபயோகித்துவிடுங்கள். அதன் பின் உபயோகித்தாலும் பயன் இருக்காது.
நிச்சயமாக .. 1 மி.லி கிரீன் டீ தூளில் 8-10 கப் அளவு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். டீ பேக்கை விட நேரடியாக தேயிலை தூளை நீரில் கொதிக்க விடுவதால் அதன் பலன் நிறைய கிடைக்கும்.
அதிலுள்ள கேடசின் என்ற பாலிஃபீனால் உடல் எடையை குறைக்கும். குடல்களில் படியும் கொழுப்பை கரைக்கும். புற்று நோயை தடுக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
அதோடு அதில் விட்டமின் பி, சி, காஃபைன், ஃபோலிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இவை ஆரோக்கியமான இளமையான சருமத்தை தருகிறது. மாலைக் கண் நோயை தடுக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. காஃபைன் சக்தியையும் புத்துணர்வையும் தருகிறது.