வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்திக்கான அடையாளங்கள் தென்படுகின்றன!- எதிர்க்கட்சித் தலைவர்

2017ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமான அபிவிருத்திக்கான அடையாளத்தை காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்திக்கான அடையாளங்கள் தென்படுகின்றன.

எவ்வாறாயினும் இந்த சந்தர்ப்பமானது மக்களுக்கு நிவாரணங்கள் தேவைப்படும் சந்தர்ப்பமாகும்.

அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு மக்களின் வீட்டுக்கு பிரச்சினைக்கு தீர்வு இந்த வரவு செலவுத்திட்டத்தில் காணப்படுகின்றது.

இந்த யோசனைகளை செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.