அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதி உட்பட 3 பேர் கம்போடியா நாட்டிற்கு சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு படகு மூலமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
அப்போது, பிடிக்கப்பட்ட அவர்கள் நவுருத்துவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா- கம்போடியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நவுரு தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது.
கம்போடியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வறுமை நிலையில் இருக்கும் பொழுது அங்கு அகதிகள் குடியமர்த்தப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகள் உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி இதுவரை ஐந்து அகதிகள் கம்போடியாவுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கு வாழ முடியாததால் அவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டால் கம்போடியாவின் நிலை ஒரு சதவீதம் என்று கூட இல்லை. கம்போடியாவில் அகதிகள் குடியமர்த்தலுக்கு எழும் எதிர்ப்பிற்கு இவையெல்லாம் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கம்போடியா நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அகதி சரியான பொருளாதார சூழல் இல்லாத நிலையில் அங்கு அவதிக்குள்ளாகியுள்ளார்.