தேவையான பொருள்கள் :
இஞ்சி – ஒரு கிண்ணம்,
பூண்டு – ஒரு கிண்ணம்,
காய்ந்த மிளகாய் – 15,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
* பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
* இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
* கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளித்த பின், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
* சூப்பரான இஞ்சி – பூண்டு சட்னி ரெடி.
* இட்லி, தோசை, தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
* இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.