நடிகர் விஷால் சில காலமாக நிறைய போராட்டங்களை சந்தித்து வருகிறார். நடிகர் சங்க செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் இவர் முன்பு பதிவியிலிருந்தவர்கள் செய்த தவறை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.
சினிமா கலைஞர்களுக்கு சங்கத்தின் சார்பாக பல நல்ல திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். சமீபத்தில் நடிகர்சங்கத்தின் ஓராண்டு கணக்குகளை இணையத்தளத்தில் வெளியிட்ட இவர் தற்போது ஏதோ கவலையோடு ட்விட்டரில் ட்வீட் போட்டுள்ளார்.
நாளை சங்க கூட்டம் நடைபெற போகிறது. இதில் பல நடவடிக்கைள் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.