இன்று ஜூம்மா தொழுகையின் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.
சர்வதேச அழுத்தங்களினால் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதிய குழு நியமிக்கப்படுவதற்கு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தை இலங்கை தவ்ஹீந் ஜமாத்தினரின் ஏற்பாடு செய்துள்ளனர். மத தலைவர்கள், அதிகளவான பெண்கள் உட்பட பொது மக்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் தலைமையில் 2009 ஆம் ஆண்டு ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு பாதகமில்லாத வகையில் தற்கால தேவைகளுக்கு மாற்றங்கள் செய்யவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.