எல்லா சமயங்களிலும் டயட் பற்றியே யோசிக்க முடியாது. அவ்வப்போது நமது நாக்கிற்கும் மதிப்பு அளிப்போம். என்றைக்காவது அப்படி சாப்பிடுவதல் தவறில்லை. கொழுப்புமிக்க மசாலா உணவும் சாப்பிட வேண்டும்.
அதே சமயம் உடல் எடையும் அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்காக இந்த டிப்ஸ் . அவ்வாறு சாப்பிட்டதும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென இந்த குறிப்புகள்.
இளஞ்சூடான நீர் :
எந்த ஒரு சமயத்தில் கொழுப்பு உணவு சாப்பிட்டதும் உடனே வெதுவெதுப்பான சூட்டில் நீரை குடித்தால் விரைவில் செரித்து அதிக கலோரியை எரிக்க உதவும்.
படுக்கைக்கு நோ :
வயிறு முட்ட சாப்பிட்டு உடனே தூங்கச் செல்வது பெருந்தவறு. அவ்வாறு செய்தால் கொழுப்பு எரிக்கப்படாமல் சேமித்தி வைக்கப்படும். இதனால் உடல் பருமனாகும்.
சில்லென்று குடிக்க கூடாது :
கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் குளிர்ந்த ஜூஸ் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதனால் வயிறு, கல்லீரல், சிறு குடல் பாதிப்படையும்.
10 நிமிட நடை :
நன்றாக சாப்பிட்டதும் காலாற ஒரு 10 நிமிடம் நடப்பது நீங்கள் உங்கள் இரைப்பைக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை. ஏனெனில் செரிப்பதற்கு நடை உதவும்.
மிளகு மற்றும் தேன் :
கொழுப்பு உணவு சாப்பிட்டதும் மிளகு சாப்பிடுவது நல்லது. இது கலோரி எரிப்பதை துரிதப்படுத்தும். மிளகை தேனோடு கலந்து சாப்பிடுவது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். கொழுப்புகளை கரைப்பதற்கு இவை உதவும்.
திரிபலா :
திரிபலா ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டபின் இதனை எடுத்துக் கொண்டால் குடல்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து குடிக்க வேண்டும்.