கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் திரையுலகில் முழுகவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.
புதிய படம் இயக்க முடிவு செய்தவர் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். ஹீரோவாக மோகன்லால் மகன் ஜீத்து ஜோசப்பை நடிக்க வைக்க பேச்சு நடந்தது. அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தந்தை ரஜினியிடம் ஆலோசித்தபோது, தனுஷை நாயகனாக வைத்து இயக்க யோசனை கூறினார்.
தனுஷுடம் பேசியபோது, ஏற்கனவே தான் நடித்து வெற்றி பெற்ற, வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாக கதை வசனத்தை தான் எழுதுவதாகவும் அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கும்படி சவுந்தர்யாவிடம் தெரிவித்தார் தனுஷ். அதை ஒப்புக்கொண்டார்.
இப்படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், கதாநாயகி தேர்வு நடக்கிறது. ஏற்கனவே இயக்குவதாக இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை சவுந்தர்யா நிறுத்தி வைத்திருக்கிறார்.