கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்துள்ளது ஏழை, பணக்காரர்கள் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
கைகளில் பணத்தினை வைத்துக்கொண்டு ஏழை மக்கள் உணவுக்காக திண்டாடினால், வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு வங்கிகளில் மாற்றுவது என்று செல்வந்தர்கள் திண்டாடி வருகின்றார்கள்.
வருகிற டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் இரு நோட்டுகளும் இந்திய மக்களிடம் இருந்து விடைபெறுகின்றன. மொத்தம் 50 நாட்களே கொடுக்கப்பட்டுள்ள இந்த காலக்கெடு கருப்பு பண முதலைகளுக்கு பற்றவே பற்றாது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக வங்கிகளில் பெரும் தொகையை கொடுத்து மாற்றினால் சிக்கிகொள்ள வாய்ப்பிருப்பதால் என்ன செய்வது என்ற தெரியாமல் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள் செல்வந்தர்கள்.
அப்படி ஒரு வழியாக 100 ரூபாய் நோட்டாக மாற்றினாலும், அவ்வளவு பெரிய தொகையை வைப்பதற்கு இடமும் இல்லை என்பதால் கையில் பணத்தை வைத்துக்கொண்டு விட்டத்தை பார்க்கும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்தால் நீயெல்லாம் பணக்காரன் என்று சொல்லிய நாட்கள் கடந்து, 10, 50 ரூபாய் வைத்திருந்தால் தான் நீயெல்லாம் பணக்காரன் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.
இன்று, உத்திரப்பிரதேசத்தின் பரேலியில் சாலையோரம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
தீ வைத்து எரிக்கப்பட்ட ரூபாய் பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. ஒரு செல்வந்தர் தன்னிடம் உள்ள பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றவும் முடியாமல், உண்டியலில் செலுத்தவும் முடியாமல் ஒரு கோடியை வழியில் சென்ற பிச்சைக்காரனுக்கு கொடுத்துள்ளாராம்.
இப்படி ஒரு கோடியை பிச்சைக்காரனுக்கும், தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு கொஞ்சம் தொகையும் கொடுத்து தன்னிடம் உள்ள தொகையின் அளவை குறைத்து, எஞ்சிய தொகையை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளாராம்.
ஆக மொத்தத்தில் இருவரும் ஒரு கருப்பு பண முதலை ஆவார். எங்கே தானும் கருப்பு பண வரிசையில் சிக்கிவிடுவோமா என்ற அச்சத்தில் இப்படி தன்னிடம் உள்ள தொகையை கரைத்துள்ளார்.