வடக்கில் உரிய நிர்வாகம் நடைபெறுவதில்லை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் சர்வதேச தலையீட்டை பெற்று தருமாறு, பிரித்தானியாவின் பொதுநலவாய நாடுகள் விவகார பிரதியமைச்சர் ஜோய்ஸ் அனேலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் முதலமைச்சரின் இந்த கோரிக்கைக்கு பிரித்தானிய பிரதியமைச்சர் எந்த பதிலையும் வழங்கவில்லை.
வடக்கில் சர்வதேச தலையீடு அவசியம் எனக் கூறியுள்ள முதலமைச்சர், அமைதியாக காணப்படும் வடக்கில் இராணுவம் நிலை கொண்டிருப்பது குறித்தும் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆர் 2 பீ. என்ற முறைக்கு அமைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த முறையின்படி நாடு ஒன்றின் மக்களை அரசாங்கத்திற்கு பாதுகாக்க முடியாது என்றால், சர்வதேச தலையீட்டின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அமைதி படையை அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கின்றது.