கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவ மாணவியருக்கு ஜனவரி மாதம் முதல் கைக்கணனி (டெப்) வகைகள் வழங்கப்படவுள்ளன.
புதிய வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர் தர மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்படவுள்ளன.
சுமார் இரண்டு லட்சம் டெப்கள் வழங்கப்பட உள்ளதாகவும் ஜனவரி மாதம் முதல் டெப்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்கள் ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் மாணவர்களுக்கும், இருபத்து எட்டாயிரம் ஆசிரியர்களுக்கும் டெப்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலவச சீருடை, புத்தகங்களுக்கு மேலதிகமாக இலவசமாக டெப்களை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதல் தெற்காசிய வலய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.