தெல்தெனிய, ஒருதொட்ட பிரதேசத்தில் உள்ள களுகங்கைக்கு நீராடச் சென்றசிறுவர்கள் (17) இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் நண்பர்களுடனேயே நீராடுவதற்காக குறித்த கங்கைக்குச்சென்றுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
களுகங்கைக்கு நீராடுவதற்காக ஆறு பேர் சென்றிருந்த வேளையில் இருவர் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளார்கள் என்றும் ஏனைய நால்வர் பாதுகாப்பாக இருப்பதாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.