அமெரிக்காவில் நாயிடம் சிக்கிய மகனை காப்பாற்ற தாய் போராடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தின் அனகிம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்பென்சர் பிஷப்.
இவரது மனைவி வெளியில் சென்று விட்டு திரும்பிய பின்னர் வீட்டில் இருந்த நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென இரண்டு நாய்களும் கார் பக்கத்தில் இருந்த அவருடைய மகனை விரட்டிச் சென்று கடிக்க ஆரம்பித்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தன் மகனை உடனடியாக தூக்கிக்கொண்டு வீட்டை திறக்க முயன்றுள்ளார், அப்போதும் நாய் விடாமல் கடிக்க பாய்ந்துள்ளது.
இதுகுறித்து அவரின் கணவர் கூறுகையில், தனது மனைவி ஒரு ஹீரோ என்றும், அவர் மட்டும் அன்று தன் குழந்தையை காப்பாற்றவில்லை என்றால் என் மகன் இறந்திருப்பான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மகனுக்கு தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகவும், நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.