மீண்டும் பில்லா 2 இயக்குனரின் படத்தில் நயன்தாரா! அஜித் நடிப்பாரா….

2012 இல் அஜித், நயன்தாரா நடித்து ரசிகர்களை குஷியாக்கிய படம் பில்லா 2 . இதில் நமீதாவும் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சக்ரி டோலெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து உன்னை போல் ஒருவன் படத்தையும் எடுத்திருந்தார். இதுவே அந்த இயக்குனரின் முதல் படம்.

தற்போது நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயின். இவரை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

இப்போது பில்லா 2 இயக்குனர் புதியதாக ஒரு படம் எடுக்கிறாராம். இதில் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இக்கதையில் அஜித் நடிப்பாரா என கேள்விகள் எழுந்துள்ளது.

விரைவில் அதிகாரபூர்வ தகவலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.