பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்

பொன்னாங்கண்ணி கீரை உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை, இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.எங்கும் வளரும் தன்மை கொண்டது.

இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு, அவை, சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி ஆகும் இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. நாட்டு பொன்னாங்கண்ணியை தான் பெரும்பாலும் மருத்துவத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். நாட்டு பொன்னாங்கண்ணி பல அறிய மருத்துவ குணங்களை கொண்டது.

  • பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும்.
  • இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது.
  • பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, உப்பு சேர்த்து, கடைந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இதையே துவரம் பருப்பு, நெய்யுடன் சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
  • வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் குணப்படுத்தும்.
  • சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
  • இந்த கீரையில் கல்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் ரொம்பவே முக்கியம்.
  • பொன்னாங்கண்ணி கீரையுடன், பாசிபருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
  • 500 கிராம் பொன்னாங்காணி கீரையுடன், 100 கிராம் வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.
  • ஆண்களின் விந்து உற்பத்திக்கு இந்த கீரை மிகவும் உபயோகமாக இருக்கும்.
  • கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணிச் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.