எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான ஹம்பந்தோட்ட துறைமுகம் மத்தல விமான நிலையம் உள்ளிட்டவைகள் உற்பட அனைத்து நிறுவனங்களையும் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா சீனா என எந்த நாட்டு முதலீட்டார்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேருவளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான ஹம்பாந்தோட்ட துறைமுகம் மத்தல விமான நிலையம் உள்ளிட்டவைகள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா சீனா என எந்த நாட்டு முதலீட்டார்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.
எமது ஆட்சியில் அவை அனைத்தையும் அரசுக்கே எடுத்துக்கொள்வோம் என்ற விடயத்தை நான் கூறி வைக்க விரும்புகிறேன்.
நல்லாட்சி அரசு வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விற்றுவிட தீர்மானித்துள்ள நிறுவனங்களை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளவர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்திருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்தியாவோடு அதிகளவில் நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
எனினும் அண்மைக்காலமாக சீனாவோடும் இலங்கை அரசாங்கம் அதிக நட்புறவை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் தான் மகிந்த ராஜபக்சவோடு அதிக நல்லுறவைக் கொண்டிருந்த சீனாவோடு மைத்திரி, ரணில் அரசின் நெருக்கம் இப்பொழுது முன்னாள் ஜனாதிபதிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
இதேவேளை மீண்டும் பதவிக்கு வரும் கனவோடு மகிந்த ராஜபக்ச கிராமம் கிராமமாக சுற்றுவதை கிண்டல் செய்யும் ஒரு தரப்பும் இப்பொழுது உருவெடுத்திருக்கின்றது. இந்நிலையில் தான் அவர் தான் பதவிக்கு வந்தால் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.