அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள ஒபாமா திட்டமிட்டிருந்தார் என மங்கள குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் நாட்டில் வெசாக் கொண்டாட்டங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தமையினால் அந்த திட்டம் நிறைவேறவில்லை என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த விடயம் பல மக்களுக்கு தெரியாது எனவே தான் இந்த தகவலை வெளிப்படுத்துவதாக மங்கள குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும்,மே மாதம் ஒபாமா வருகை தந்திருந்தால் அதுவே அமெரிக்கா ஜனாதிபதியின் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமாக அது அமைந்திருக்கும் என மங்கள தெரிவித்துள்ளார்.
வெசாக் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு இலங்கையில் இடம்பெற்றிருந்தமையினால், அந்த நல்ல வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது என மங்கள கூறியிருந்தார்.
இந்திய ஊடகமான த ஹிந்துவிற்கு வழங்கிய நேர் காணலின் போதே மங்கள மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.