அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்பவர்கள் தங்கள் சட்டையில் Safety Pin(சேப்டி பின்) குத்தி கொண்டு போராடுவதை நாம் பார்த்திருப்போம். அது ஏன் தெரியுமா?
இந்த வருடம் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் அங்குள்ள மக்கள் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் தங்கள் சட்டையில் பின் குத்தி கொண்டார்கள்.
அதை பார்த்த அமெரிக்க மக்கள் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் டொனால்ட் டிரம்ப்கு எதிராக போராடும் போது தங்கள் சட்டையில் சேப்டி பின் குத்தி கொள்கின்றனர்.
இது ஏன் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அதாவது, அமைதியான முறையில் போராடுவதை குறிக்கும் வண்ணமே சேப்டி பின்களை சட்டையில் குத்தி கொள்கிறார்களாம்.
இதன் மூலம் அன்பு தான் வேண்டும், வெறுப்பு வேண்டாம் என சொல்லாமல் சொல்கிறார்களாம்.