அவுஸ்திரேலியாவுக்குப் புகலிடம் தேடிச்சென்று அவரிகளின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நௌவ்ரு, மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் மீள்குடியேற்ற உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம்.
இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நௌவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளில் சிறீலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு பகுதியினரே அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்தப்படவுள்ளனர் எனவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.