அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
தனது தோல்விக்கு F.B.I உளவுத்துறை இயக்குனர் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட ஆதரவாளர்களுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளராக ஹிலாரி கிளின்டன் செயற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட பல மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் தொடர்ந்து ஹிலாரி கிளின்டன் விமர்சிக்கப்பட்டார்.
அவ்வாறு இருக்கும் போது மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக F.B.I உளவுத்துறை இயக்குனர் பகிரங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனால் தன் மீது காணப்பட்ட மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது ஹிலாரி கிளின்டனின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த நாட்களில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதனையும் ஹிலாரி கிளின்டன் இதன் போது நினைவுப்படுத்தியுள்ளார்.