தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் என்பதை விட எத்தனை கோடி வசூல் செய்துள்ளது? என்று தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் ஜுரம் அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. இந்நிலையி படம் தோல்வியடைந்தாலும் பல கோடிகளை ஓப்பனிங்கில் வசூல் செய்திருக்கும் சில படங்கள், அதை பற்றிய தொகுப்பு தான் இவை..
லிங்கா
லிங்கா திரைப்படம் ரஜினி திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தது, இதன் பிறகு தான் ரஜினி கமர்ஷியலையே வேண்டாம் என்று ஒதுக்கினார். இப்படம் தோல்வி என்றாலும் ரூ 150 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது.
பில்லா-2
பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா-2 எடுக்கப்பட்டது, ஆனால், இயக்குனர் விஷ்ணுவர்தன் இல்லை, அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்கம், பிரமாண்டமான ஓப்பனிங் என பில்லா-2 வெளிவந்து எதிர்ப்பார்த்த அளவிற்கு படம் இல்லை, ஆனாலும், வசூல் ரூ 70 கோடியை தாண்டியது.
புலி
விஜய் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய தோல்வி புலி, ஏனெனில் இந்த படத்தின் பட்ஜெட் அப்படி, ரூ 100 கோடி வரை செலவு செய்து இந்த படத்தை எடுத்தார்கள், படம் படுதோல்வி அடைந்தாலும் வசூல் ரூ 90 கோடி வரை இருந்ததாக கூறப்படுகின்றது.
மாற்றான்
சூர்யா நடிப்பில் வெளிவந்த மாற்றான் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, படத்தின் நீளம் தான் ஒரு குறை, இப்படமும் தோல்வி தான் என்றாலும் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.