அமெரிக்க நாட்டில் டொனால்ட் டிரம்பிற்கு கணவன் வாக்களித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கணவனுக்கு தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையிலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் தனது மகன் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்த காரணத்திற்காக அவரை இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தியின் பரபரப்பை அடங்குவதற்குள் தற்போது கணவன் மீது மனைவி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெயர் வெளியிடப்படாத கணவன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘பொதுவாக நானும் எனது மனைவியும் எதிரெதிர் செயல்களையே செய்து வருகிறோம். நான் தியேட்டருக்கு போகலாம் என அழைத்தால், என் மனைவி ஹொட்டலுக்கு போக விருப்பம் தெரிவிப்பார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது என் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தார்.
இதற்கு எதிராக நான் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்தேன். இதனை அறிந்த என் மனைவி ஆத்திரத்தில் கடுமையாக என்னை சாடினார்.
இதுமட்டுமில்லாமல், அடுத்த 30 நாட்களுக்கு அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என எனக்கு தடை விதித்துள்ளது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ அந்த தகவலில் கணவன் தெரிவித்துள்ளார்.
இத்தகவலால் அதிர்ச்சி அடைந்த சிலர், ‘டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்த கணவன்களின் வீட்டு பெண்கள் இதே நடவடிக்கையை எடுத்தால், அது ஆபத்தில் முடிந்து விடும்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.