HIV தொற்றுக்குள்ளான 34 பேர் பலி!

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் HIV தொற்றுக்குள்ளான 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்களே அதிகமாக HIV தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளத.

பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் இதனை வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 405 பேர் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 65 வீதமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திலேயே அதிகமான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.