திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கட்சி வேட்பாளராக சரவணன் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர், பிரச்சாரம் செய்யும் போது நடிகர் விக்ரம் சாயலில் இருக்கும் நபரை களம் இறக்கிவிட்டுள்ளார். ‘கந்தசாமி’ படத்தில் வரும் சீயான் விக்ரம் கெட்டப்பில், விக்ரம் சாயலிலேயே ஒருவரை கொண்டு வந்து அவரை பிரச்சார வேனில் ஏற்றி தெரு தெருவாக சுற்ற விடுகிறார் சரவணன்.
விக்ரம் சாயலில் இருப்பதால், மக்கள் அனைவரும் விக்ரம் தான் வந்திருக்கிறார் என்று நம்பி, அவரை பார்ப்பதற்காக படையெடுக்கின்றனர்.