அசினுக்கு 8 ஆண்டுகளில் கிடைத்தது ஐஸ்வர்யா ராய்க்கு 19 ஆண்டுகளில் கிடைத்துள்ளது

நடிக்க வந்து 19 ஆண்டுகள் கழித்து தான் ஐஸ்வர்யா ராயின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஏ தில் ஹை முஷ்கில் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மூலம் வெற்றிக்காக ஏங்கிய ரன்பிர் மற்றும் ஐஸ்வர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்து 19 ஆண்டுகள் கழித்து தான் அவரின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. ஐஸ்வர்யாவை விடுங்க பாலிவுட்டின் கான்களும் ரூ.100 கோடி வெற்றியை ருசிக்க பல ஆண்டுகள் ஆகின.

சல்மான் கான்

சல்மான் கான் 1989ம் ஆண்டு நடிக்க வந்தார். அவர் நடிக்க வந்து 21 ஆண்டுகள் கழித்து தான் அவரின் படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. 2010ம் ஆண்டில் வெளியான தபாங் படம் தான் ரூ.100 கோடி வசூலித்தது.

ஷாருக்கான்

ஷாருக்கானின் முதல் படமான தீவானா 1992ம் ஆண்டு வெளியானது. ஆனால் 2011ம் ஆண்டு வெளியான ரா.ஒன் படமே அவர் நடிப்பில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் ஆகும்.

ஆமீர் கான்

ரூ.100 கோடி, ரூ.200 கோடி மற்றும் ரூ.300 கோடி வசூல் படத்தை கொடுத்த முதல் இந்திய நடிகர் ஆமீர் கான். ஆனால் இந்த வெற்றியை அடைய அவருக்கு 24 ஆண்டுகள் ஆகின. 2008ம் ஆண்டு வெளியான கஜினி இந்தி ரீமேக் மூலம் ரூ.100 கோடி வெற்றியை அடைந்தார் ஆமீர் கான்.

அசின்

அசின் நடிக்க வந்து 8 ஆண்டுகளிலேயே ரூ.100 கோடி வசூல் வெற்றியை அடைந்துவிட்டார். கஜினி இந்தி ரீமேக்கின் வெற்றி தான் அது. ரூ.100 கோடி கிளப்பை துவங்கிய நடிகையே நான் தான் என பெருமையாக கூறி வந்தார்.