நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்கள் ஹிட்டாகி வருவதால் சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். அம்மணி ரூ.4 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.
இந்நிலையில் தான் நயன்தாரா ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.
சீனியர் ஹீரோக்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்க மறுக்கிறாராம் நயன்தாரா. ஆமா, அவர்களுடன் நடித்தால் சும்மா மரத்தை சுத்தி பாட்டுபாட வைப்பார்கள் அவ்வளவு தான் என்கிறாராம்.
இளம் ஹீரோக்களுடன் நடித்தால் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கிடைக்கும். ஹீரோவை காதலித்து டூயட் பாடுவதுடன் என் கதாபாத்திரம் முடிந்துவிடாது என்கிறாராம் நயன்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்க விரும்புகிறார் நயன்தாரா. மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்.
முன்பெல்லாம் பிரச்சனை இல்லாமல் கிளாமர் காட்சிகளில் நடித்து வந்தவர் நயன்தாரா. தற்போது கிளாமர் காட்சிகளில் நடிக்கவும் மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.