அதன்படி, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ‘ஜில்லா’ பட இயக்குனர் ஆர்.டிநேசன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. அஜித் நடித்த வேடத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில், ‘வேதாளம்’ படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன் கதாபாத்திரத்திற்கு பிரபலமான நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, லட்சுமி மேனன் கதாபாத்திரத்திற்கு தமிழில் வளர்ந்துவரும் நடிகையான ‘கயல்’ ஆனந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
‘கயல்’ ஆனந்தி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சில படங்களும் அவர் கைவசம் உள்ளது. பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக ஏற்கெனவே ஒரு பேட்டியில் ஆனந்தி குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.