அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனித்து செயற்பட விரும்புவது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜேன்ஸ் ஸ்ரோல்டென்பேர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மேற்குலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியன பாரிய பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் தனது பிரசார நடவடிக்கைகளின் போது, மேற்கத்தேய இராணுவக் கூட்டணியான நேட்டோவால் எதுவித பயனும் இல்லை என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக நேட்டோ தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லையாயின் தாக்குதல் ரீதியான உதவிகளை நேட்டோவிடம் இருந்து அமெரிக்கா பெற நேரிட்டால், ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என ட்ரம்ப் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் முதல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப், எப்படி நேட்டோவுடன் இணைந்த செயற்படப் போகின்றார் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதேவேளை நேட்டோ அமைப்பின் இயக்கத்திற்கு அமெரிக்காவே 70 சதவீமான நிதிப்பங்களிப்பை வழங்குகின்றது. ஆனால் ட்ரம்பின் நிலைப்பாடு இனி எவ்வாறு அமையும் என்பதில் குழப்பம் நீடிப்பதால், ஏனைய நாடுகளில் இருந்து நிதியை திரட்ட நேட்டோ தயாராகலாம் எனவும் கூறப்படுகின்றது.