அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்கும் செயற்படவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றம் என்பன தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்கியிருந்தது.
அமெரிக்காவின் புதிய அரசாங்கத்திலும் அதன் கொள்கைள் தொடருமென நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.