பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். அப்படியான பணத்திற்காக பல்வேறு வழிகளிலும் ஊழல் செய்வதற்கு தயங்காதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இதேபோன்றே மக்கள் வசிக்கின்ற அல்லது பாவனைக்கு உட்படுத்துகின்ற கட்டிடங்களை கட்டும்போது கூட ஊழல் செய்கின்றார்கள். அந்த அளவிற்கு உயிரைம் தாண்டி பணத்தின் மீதான நப்பாசை காணப்படுகின்றது.
இவ்வாறு ரஷ்ய நாட்டில் ஒரு அழகான கட்டிடத்தில் திருத்த பணியினை மேற்கொள்ளும்போது அக் கட்டிடத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து தரையில் விழுந்துள்ளது. இக் கட்டிடத்தினைக் கட்டும்போது தரம் குறைந்த மூலப் பொருட்கள் பாவிக்கப்பட்டமையே இவ் அனர்த்தம் நிகழ்வதற்கு காரணமாகும். எனினும் எவருக்கும் காயமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்பட்டிருக்கவில்லை.