அடர்த்தியான புரிகங்கள் இருப்பதால் கேலிக்கு உள்ளான கரீபியன் தீவுப்பகுதி இளம்பெண் ஒருவருக்கு மொடலாகும் வாய்ப்பு வீடு தேடி வந்துள்ளது.
கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள Puerto Rican தீவில் குடியிருந்து வருபவர் நடாலியா காஸ்டெலர். 17 வயதான இவரை பாடசாலையில் இவரது நண்பர்களும் சக மாணவர்களும் இவருக்கு இருக்கும் அடர்த்தியான புரிகங்களால் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளனர்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார் நடாலியா. சமயங்களில் தமது அடர்த்தியான புரிகங்களை வடித்துவிடலாமா என்று கூட யோசனை செய்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல நிறுவனம் அடர்த்தியான புரிகங்களை கொண்ட மொடல்களை தேடி ஒரு விளம்பரம் ஒன்றை நாளேடுகளில் பிரசுரித்துள்ளது. அந்த விளம்பர நிறுவனத்திற்கு தமது புகைப்படங்களை அனுப்பி வைத்த நடாலியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த செய்தி வந்துள்ளது.
தங்களது நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய அந்த நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுடன் பெரும்தொகை ஒன்றையும் வழங்கியுள்ளது. தமக்கு மன உளைச்சலையும் அவமானத்தையும் மட்டுமே தந்துள்ள புரிகத்தால் தற்போது பிரபலமடைய இருப்பதை அவர் பெருமையாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனது புகைப்படங்களை வெறுக்கும் கூட்டம் இப்போதும் இருக்கிறது என்ற போதும் அவை அனைத்தியும் ஒதுக்கித் தள்ளிக் கொண்டு வெற்றி மீது வெற்றி வைத்து முன்னேறிக்கொண்டிருக்கிறார் நடாலியா.